திருப்பூர்: திராவிடர் கழகம் சார்பில், திருப்பூர் அரிசி கடை வீதியில் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாங்கள் வளர்ந்துவிட்டோம், நாங்கள் தான் எதிர்க்கட்சி என கூறிக்கொள்ளும் பாஜக, அதனை உறுதிப்படுத்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? பலத்தை நிரூபிக்க பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட போட்டியிட்டிருக்கலாம்.
அதை செய்யாமல், அதிமுகவை வைத்து பாஜக பொம்மலாட்டம் ஆடி வருகிறது. அண்ணா திமுகவாக இருந்த அதிமுக, தற்போது அடமான திமுகவாக மாறியுள்ளது. எண்ணற்ற வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை" என்றார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.