தமிழகம்

சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு நிகழ்ச்சி நடத்த யுஜிசி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 1-ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து பல்கலை. துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கை:

பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக மார்ச் 1-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் நடத்த வேண்டும்.

இதனை பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலினபேதம் போன்றவை இல்லாதசமூகம் உருவாவதற்கான ஒரு முன்னெடுப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT