எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவிகளுக்கு இலவச மேல்நிலைக்கல்வி அளிக்கப்படும் என சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- மேலூரில் சைதை சா.துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவிகளுக்கு இந்த பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது. 10-ம் வகுப்பில் 450 மதிப் பெண்ணுக்கு மேல் எடுத்தவர் களுக்கு இலவசக் கல்வியும், 475-க்கு மேல் பெற்றவர்களுக்கு இலவச கல்வியுடன் இலவச விடுதி வசதியும் அளிக்கப்படும்.
இங்கு அளிக்கப்படும் மேல் நிலைக்கல்வி வாழ்க்கைக் கல்வி யாக இருக்கும். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு அறிமுக வகுப்புகள் நடத்தப் படும். நீட், ஐஐடி போன்ற நுழைவுத்தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த இலவச கல்வியில் சேர விரும்புவோர் முதல்வர், சைதை சா.துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எண் 7/1, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை 625 106 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். செல்போன் எண்கள்: 94430-49599, 7339584683.