தமிழகம்

வீட்டிலிருந்தபடியே வருவாய்த்துறை சேவையை பெறும் உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்: முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

இ-சேவை மையங்கள் மூலம் வருவாய்த்துறையின் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவர்கள், வீட்டிலிருந்தபடியே கைபேசியில் அவற்றை பெறும் வகையிலான ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்ட வேளாண் இயக்கு நர்கள், மாவட்ட அளவில் செயல் படுத்தப்படும் வேளாண் நலத்திட் டங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் ஒருங் கிணைத்தல் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். இவர்களது அலுவலக பயன்பாட்டுக்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 36 ஆயிரம் செலவில் வாங்கப்பட்ட 17 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, 5 வாகன ஓட்டுநர் களுக்கு முதல்வர் கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் சாவிகளை வழங்கினார்.

தொழில்நுட்ப கட்டிடங்கள்

சேலம், ஜாகீர்அம்மாபாளையத் தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 50 ஆயிரம் சதுரடி பரப்பில் ரூ.19 கோடியே 72 லட்சத்தில் நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அது சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.1 கோடியே 22 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நிர்வாக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

ஒருங்குறி மாற்றி

தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ்க்கணினி ஆய்வாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ் இணைய கல்விக்கழகம் மூலம் தமிழ் மென் பொருள் உருவாக்கும் திட்டம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தில், ரூ.1 கோடியே 50 லட்சத்தில் செயல்படுத்தப்படுகிறது.

முதல்கட்டமாக 15 மென் பொருள்கள் உருவாக்க திட்டமிடப் பட்டு, அதில் தமிழிணையம் ஒருங்குறி (யுனிகோடு) மாற்றி, தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக் கள் ஆகிய 2 மென் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இணையதளம் வாயிலாக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த ஒருங்குறி மாற்றியை பயன்படுத்துவதால், பலதரப் பட்ட குறியீடுகளில் உருவாக்கப் பட்டவற்றை அதே நிலையில் தமிழ் ஒருங்குறிக்கு மாற்றலாம்.

மேலும் தமிழ் ஒருங்குறி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 10 புதிய தமிழிணையம் ஒருங்குறி எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை தமிழ் இணைய கல்விக்கழகத்தின் ‘www.tamilvu.org/tkbd/index.html’ இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழகத்தில் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் வருவாய்த்துறையின் பல்வேறு சான்றிதழ் சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றை எளியமுறையில் பொதுமக்களுக்கு வழங்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக கடந்த 2-ம் தேதி முதல் கைபேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அறி வுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்களுக்கு சான்றிதழ் வழங்க ஒப்புதல் கிடைத்ததும் குறுஞ்செய்தி மூலம் சிறிய இணைய முகவரி (tiny url) அனுப்பி வைக்கப்படும். அந்த வசதியுடன் கூடிய புதிய ‘ உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் இணைய உதவியுடன், அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட் கைபேசி மூலம் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம், பதிவிறக்கமும் செய்யலாம்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, எம்.மணிகண்டன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் ககன்தீப்சிங் பேடி, தா.கி.ராமச்சந்திரன், தமிழ்நாடு மின்னணு நிறுவன இயக்குனர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT