ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிய ராக பொறுப்பேற்ற வளர்மதி. 
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக வளர்மதி பதவியேற்பு

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வளர்மதி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக செயல்பட்டு வந்த வளர்மதி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் பொறுப்பு ஏற்க வந்த புதிய மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், புதிய மாவட்ட ஆட்சியரான வளர்மதி சென்னையில் பிறந்தவர். எம்.பி.ஏ. பட்டதாரி. இவர், 2003-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பயிற்சி பெற்றார்.

2005-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் (சென்னை) நிர்வாக அதிகாரியாகவும், 2006-ல் திருவண்ணாமலை வரு வாய் கோட்டாட்சியராகவும், 2007-ல் தருமபுரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியராகவும் மற்றும் சென்னை சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக பணியாற்றி வந்தது குறிப்பிட்டத்தக்கது. இதையடுத்து, பணிமாறுதல் பெற்று முதன்முறையாக ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT