இந்த கோடையில் சிறார்கள் தங்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 'தி இந்து' யங் வேர்ல்ட் வழங்கும் 3-வது கோடைகால முகாம் இன்று தொடங்குகிறது.
சென்னை பள்ளிக்கரணை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் ஆகிய இடங்களில் இன்று (22.5.17) தொடங்கி 26.5.17 (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெறும். சிறார்கள் மேலும் கற்கவும், சிந்திக்கவும், திறமை குறையாமல் இருக்கவும் இது உதவும்.
இந்த முகாம் 8 முதல் 10 வயது வரை உள்ளவர்களுக்கு அடிப்படை நிலை பயிற்சியும், 11 முதல் 13 வயது வரையிலான சிறார்களுக்கு மேம்பட்ட நிலை பயிற்சியும் அளிக்கப்படும். ரொபாட்டிக்ஸ், ஆங்கிலம், கணிதம், கலை, திறன் மேம்பாடு என பல்வேறு பயிற்சிகள் உண்டு.
இந்த முகாமில் பங்கேற்க ரூ.2,499 கட்டணம் (ரொபாட்டிக்ஸ் உபகரணங்கள், 'தி இந்து' யங் வேர்ல்ட் 6 மாத சந்தா, ஒரு மாத யங் வேர்ல்ட் கிளப் சந்தா இணைந்தது) உண்டு. அடிப்படை நிலை பயிற்சிக்கு காலை 8.30 மணி முதலும், மேம்பட்ட நிலை பயிற்சிக்கு பிற்பகல் 1 மணி முதலும் நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம். www.youngworldclub.com/summercamp என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 1800 3000 1878 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 6 மணி வரை அழைக்கலாம்.
வடபழனி சரஸ்வதி வித்யாலயா, கேம்ளின் பென்சில் நிறுவனம் ஆகியவை உறுதுணை புரிகின்றன.
சென்னையில் இன்று முதல் 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெறும்.