இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் வசதிக்காக கடந்த ஆண்டின் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட் டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் ஒன்றே கால் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண் ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ம் தேதி ஆகும். இதற் கிடையே, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் வசதியை கருத் தில்கொண்டு கடந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் (www.tntea.ac.in) வெளியிட்டுள்ளது.
அதில் கட் ஆப் மதிப்பெண் விவரங்களை மாவட்டம், கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரி யாக விளக்கமாக தெரிந்துகொள் ளலாம். இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் சென்ற ஆண்டைப் போல இருக்காது என்ற போதி லும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன கட் ஆப் மதிப் பெண்ணுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை மாணவர் கள் ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ள முடியும்.
எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன கட் ஆப் மதிப் பெண்ணுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை மாணவர் கள் ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ள முடியும்.