தமிழகம்

பாடகர் வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: தமிழக அரசு

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாடகர் வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி திருமதி வாணிஜெயராம் அவர்கள் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திருமதி வாணிஜெயராம் அவர்களின் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT