பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

190 நாட்களை கடந்த பரந்தூர் போராட்டம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் சுமார் 190 நாட்களை கடந்து நடந்து வருகிறது. 200-வது நாள் போராட்டத்தை பெரிய அளவில் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான கண்டன பொதுக் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்தக் கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல் முருகனை அழைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால் போராட்டக்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT