பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

குளித்தலை, நங்கவரம் பகுதியில் 2,000 ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் நங்கவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், குளித்தலை, நங்கவரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 2,000 ஏக்கரில் அறுவடைக்கு காத்திருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT