தமிழகம்

குன்னூரில் காய்த்துள்ள 2 கிலோ எடையுள்ள எலுமிச்சை

செய்திப்பிரிவு

குன்னூர்: பொதுவாக எலுமிச்சை பழத்தின் எடை 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கும். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உஷா பிராங்கிளின் என்பவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில், தற்போது இரண்டு கிலோ எடையில் ராட்சத எலுமிச்சை காய்த்துள்ளது.

இதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிசயித்துப் பார்க்கின்றனர். மேலும், எலுமிச்சை பழத்துடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். ராட்சத எலுமிச்சை பழத்தை தோட்டக்கலைத் துறையினரிடம் ஒப்படைக்க உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT