கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்-கோவை இடையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தன்பாத்-கோவை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:03357), தன்பாத்திலிருந்து வரும் 5-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை வந்தடையும்.
இதேபோல, கோவை - தன்பாத் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:03358), கோவையில் இருந்து வரும் 8-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை புதன்கிழமைதோறும் நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் சென்றடையும். இந்த ரயில்கள், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.