மெட்ரோ ரயில் பயணத்தை மக்க ளிடம் ஊக்குவிக்க 40 சதவீத சலுகை கட்டணம் அறிவிக்கப் பட்டதால், கடந்த 6 நாட்களில் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் 2 வழித்தடங் களில் மொத்தம் 45 கி.மீ. தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 28 கி.மீ. தூரம் பணிகள் முடிந்து ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் பயணத்தை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ஒரு வாரத்துக்கு 40 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கணிசமாக மக்கள் கூட்டம் வரத் தொடங்கி யுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் பயணத்தை மக்களிடம் ஊக்குவிக்க 40 சதவீத கட்டணம் சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 6 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். எழும்பூர், சென்ட்ரல், அண்ணா சாலையை இணைக்கும்போது மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க் கிறோம்’’ என்றனர்.