தமிழக அரசு தலைமை செயலகம் | கோப்புப் படம் 
தமிழகம்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT