தமிழகம்

தமிழகத்தில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் டேவிதார், மோகன் பியாரே, வெங்கடேஷ் உள்ளிட்ட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று அறிவித்துள்ளதாவது:

பெயர்- புதிய பதவி (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி)

1. வி.பி.தண்டபாணி- மீன்வளத்துறை இயக்குனர் (சார் ஆட்சியர், பொன்னேரி)

2. பீலா ராஜேஷ்- நகர மற்றும் ஊரமைப்பு ஆணையர் (மீன்வளத்துறை இயக்குனர்)

3. கே.எஸ்.பழனிசாமி- ஆட்சியர், திருப்பூர் (ஆட்சியர், திருச்சி)

4. கே.ராஜாமணி- ஆட்சியர், திருச்சி (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்)

5. சந்தீப் நந்தூரி-ஆட்சியர், நெல்லை ( மதுரை மாநகராட்சி ஆணையர்)

6. என்.வெங்கடேஷ்- ஆட்சியர், தூத்துக்குடி ( நிதித்துறை துணை செயலர்)

7. எஸ்.சுரேஷ்குமார் - ஆட்சியர், நாகை ( நில நிர்வாகத்துறை இணை ஆணையர்)

8. மோகன் பியாரே - நில நிர்வாகத்துறை ஆணையர் ( இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர்)

9. பி.டபிள்யூ.சி.டேவிதார்- போக்குவரத்துத்துறை செயலர் (டுபிட்கோ தலைவர்)

10. வி.ஜெய சந்திர பானு ரெட்டி- சுகாதாரத்துறை துணை செயலர் (தமிழ்நாடு குடிநீர் வாரிய இணை நிர்வாக இயக்குனர்)

11. ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்- கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (ஆதிதிராவிடர் நலத்துறை துணை செயலர்)

12. ஆர். ஆனந்தகுமார்- நிதித்துறை கூடுதல் செயலர் ( தமிழ்நாடு ஆற்றுப்பள்ளத்தாக்கு மேம்பாட்டு முகமை செயல் இயக்குனர்)

13. எம்.ரவிக்குமார்- நில அளவை இயக்குனர் (ஆட்சியர், தூத்துக்குடி)

14. கே.நந்தகுமார்- திட்ட இயக்குனர், அவருக்கும் கல்வித்திட்டம் (ஆட்சியர், பெரம்பலூர்)

15. பூஜா குல்கர்ணி- நிதித்துறை கூடுதல் செயலர் (திட்ட இயக்குனர், அனைவருக்கும் கல்வித்திட்டம்)

16. எஸ்.பழனிசாமி- கால்நடைத்துறை துணை செயலர் (ஆட்சியர், நாகை)

17. எஸ்.ஜெயந்தி - நில நிர்வாகத்துறை இணை ஆணையர் (ஆட்சியர், திருப்பூர்)

18. எம்.கருணாகரன் - வேளாண்துறை கூடுதல் செயலர் (ஆட்சியர், நெல்லை)

19. இ.சரவண வேல்ராஜ்- பள்ளிக்கல்வித்துறை இணை செயலர் (ஆட்சியர், அரியலூர்)

20. எஸ்.பி.அம்ரித் - இணை ஆணையர், வணிகவரித்துறை (சார் ஆட்சியர், புதுக்கோட்டை)

21. வி.சாந்தா - ஆட்சியர், பெரம்பலூர் ( மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர்)

22. தீரஜ்குமார் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் ( தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர்)

23. வி.சந்திரசேகரன்- தமிழ்நாடு ஆற்றுப்பள்ளத்தாக்கு மேம்பாட்டு முகமை செயல் இயக்குனர் ( வேளாண்துறை சிறப்பு செயலர்)

24. மந்த்ரி கோவிந்த ராவ் -சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு துணை ஆணையர் (சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர்)

25. சந்திரகாந்த் பி.காம்ப்ளே -டுபிட்கோ தலைவர் (போக்குவரத்துத்துறை செயலர்)

26. டி.ஆனந்த்- தமிழ்நாடு குடிநீர் வாரிய இணை நிர்வாக இயக்குனர் ( கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்)

27. ஆல்பி ஜான் வர்க்கீஸ் - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ( தேவகோட்டை சார் ஆட்சியர் )

28. எஸ்.அனீஸ் சேகர்- மதுரை மாநகராட்சி ஆணையர் ( இணை ஆணையர், வணிகவரி அமலாக்கம்)

29. கே.எஸ்.கந்தசாமி - சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர் (சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு துணை ஆணையர்)

30. சி.என்.மகேஸ்வரன் - தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயககுனர் (சமூக பாதுகாப்பு திட்டங்கள் இயக்குனர்)

31. ராஜேந்திரகுமார் - எல்காட் தலைவர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர்)

32. பிரவீண்.பி.நாயர் - மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் (சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் - வடக்கு)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT