ஓசூர்: தளியில் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தளி அருகே தேவர்பெட்டா பகுதியைச் சேர்ந்த லகுமப்பா (53) என்பவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச் சலுக்குக் கொண்டு சென்றார். அப் போது அங்கு வந்த ஒற்றை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, வனத்துறை சார்பில் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதிக்கான காசோலையை லகுமப்பாவின் மனைவி திம்மக்காவிடம் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்வில், ஜவளகிரி வனச்சரக அலுவலர் சுகுமார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.