திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று காலை முதலே சாரல் பெய்யத் தொடங்கியது. பின்னர் தொடர் மழையாக மாறி மாலை வரை பெய்தது. பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பகலில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
கொடைக்கானலில் அடர்ந்த பனி மூட்டத்துடன் சாரல் பெய்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் மட்டுமின்றி நடந்து செல்லும் ஆட்கள் கூட தெரியாத அளவு பனி மூட்டம் காணப்பட்டது. இதையடுத்து பகலே இரவு போல் காணப்பட்டது.
இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.