தமிழகம்

தமிழக அரசின் பத்திரங்கள் விற்பனை

செய்திப்பிரிவு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘ரூ. 1500 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் இந்த ஏல விற்பனை, அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.

ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 23-ம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரை ஏலக் கேட்புகளை சமர்ப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT