தமிழகம்

நடிகை காயத்ரி ரகுராம் அளித்த புகாரால் ராணிப்பேட்டை பாஜக நிர்வாகி மீது வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால்,அந்தக் கட்சியிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகினார். பின்னர் அவர், அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், தனது புகைப்படம் சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வருவதாக, சென்னை சைபர் க்ரைம்போலீஸாரிடம் காயத்ரி ரகுராம் ஆன்லைன் மூலம் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "ராணிப்பேட்டை மாவட்டபாஜக எஸ்சி பிரிவு துணைத் தலைவர் பாபு, எனது புகைப்படத்தைஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளுடன் பரப்பிவருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி புகார் அனுப்பி உள்ளேன்" என்றார்.

காயத்ரி ரகுராம் அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கைமேற்கொள்ளுமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான ராணிப்பேட்டை பாஜக எஸ்சி பிரிவு துணைத் தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT