கடலூர்: விருத்தாசலம் அருகே ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்தும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரன் மகன் சரவணகுமார் என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. பொறியியல் பட்டதாரியான அவ ரது மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். இதற்கிடையே, அந்த மேல் நிலை குடிநீர் தொட்டி தண்ணீரை பயன்படுத்த அப்பகுதி மக்கள் தயங்கினர்.
இதையடுத்து, ராஜேந்திரபட்டினம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீ வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி தண்ணீரை குடிக்க கூடாது. உடல்நிலை சரிஇல்லாமல் இருந்தால் உடனடியாக தற்காலிகமாக கிராமத்தில் அமைக் கப்பட்டுள்ள மருத்துவ முகாமிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அக்கிராமத்துக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். மேலும்,உயிரிழந்த சரவணகுமார் குடும்பத் திற்கு ஆறுதல் கூறினார்.