தமிழகம்

பிஎட் கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பு இன்றி மேற்கொள்ளலாம்: இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு அனுமதி

செய்திப்பிரிவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்கள் தொலை தூரக் கல்வி பி.எட். படிப்புக்கான கற்பித்தல் பயிற்சியை தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே விடுப்பு இல்லாமல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் த.உதயச்சந் திரன், வெளியிட்டுள்ள ஓர் அர சாணையில் கூறியிருப்பதாவது:

தொடக்கக் கல்வி இயக்ககத் தின்கீழ் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் பிஎட் கற்பித்தல் பயிற்சியை விடுப்பு இல்லாமலேயே பணிக்கு எந்தவொரு இடையூறு இல்லா மல் எடுத்துக்கொள்ள ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ள தாகவும், அந்த கோரிக்கையின்படி ஆசிரியர்கள் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பிஎட் படிக்கும்போது கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள ஏதுவாக பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பு எடுக்காமல் அப் பயிற்சியை மேற்கொள்ளவும் அக்காலத்தை பணிக்காலமாக கருதவும் ஆணை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் அரசை கோரியுள்ளார்.

அவரது கருத்துருவை அரசு ஆய்வுசெய்து ஏற்று, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் கள், அஞ்சல்வழிக் கல்வி மூலம் பிஎட் படிக்கும்போது கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள வசதியாக, பணிபுரியும் பள்ளி யிலேயே விடுப்பு எடுக்காமல் அப்பயிற்சியை மேற்கொள்ளவும் அக்காலத்தை பணிக்காலமாக கருதவும் அரசு முடிவுசெய்து அதற்கான ஆணையை இடுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கம் நன்றி

இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பு இல்லாமல் பிஎட் பயிற்சியை தாங்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ள அனுமதி அளித்ததற்காக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பேட் ரிக் ரெய்மாண்ட் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT