தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2ஏ பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), 3-வது தளம், சாந்தோம், சென்னை-4 என்ற முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் திங்கள் முதல் வெள்ளிவரை அலுவலக நேரங்களில் மேற்கண்ட முகவரியில் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்வி சான்றுகளுடன் நேரில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்'' என்று அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT