தமிழகம்

தவறான திசையில் வாகனம் ஓட்டிய 2,546 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் விபத்துகளை தடுக்கவும், விபத்து உயிரிழப்புகளை குறைக்கவும், நெரிசலைதடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்துக்கு அதிகளவில் இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசல் ஏற்படுவது கவனிக்கப்பட்டது. இந்த விதிமீறல்களை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் (ஜன. 30) சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் ஒருநாள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,546 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த தணிக்கைமேலும் தொடரும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர்கூறுகையில், ``வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்டி அபராதத்தை தடுக்கவும். மீறுபவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சம் காட்டப்படாது’ என்றார்.

SCROLL FOR NEXT