சென்னை விமான நிலையத்தில் ரூ.1.17 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் விமானம் நேற்று அதிகாலை புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது சுற்றுலா விசாவில் துபாய் செல்ல இருந்த சென்னையைச் சேர்ந்த முகமது (30) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்துச் சென்று சோதனை செய்து விசாரித்தனர். பின்னர் அவரது சூட்கேஸை திறந்து சோதனை செய்தபோது, அதில் சவூதி, குவைத் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணம் ரூ.1.17 கோடி (இந்திய மதிப்பு) இருப்பது தெரியவந்தது.
அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.