தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மீன்வளத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதற்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கிழக்கு கடற்கரையைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மீனவர்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல, மேற்கு கடற்கரையைப் பொறுத்தவரையில் ஜூன் 1-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை மீன் பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.