தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு: ஜனநாயக விரோதம் என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் செய்தியாளர்களை அனுமதிக்காதது ஜனநாயக விரோ தம் என கவுன்சிலர்கள் குற் றம் சாட்டினர்.

சிவகாசி மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவுப் பகுதியில் அலுவலர் களிடம் மொபைல் போன்களை ஒப்படைத்த பிறகே கவுன்சிலர்கள் கூட்டத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது சில திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களைப் போலீ ஸார் சமாதானம் செய்தனர். கூட்டத்தில் மண்டலத் தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் சேது ராமன் (திமுக), குமரி பாஸ்கர் (பாஜக) ஆகியோர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க அனுமதித்தால் தான், மன்றத்தின் நடவடிக்கைகள், கவுன்சிலர்களின் செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியும்.

செய்தியாளர்களை அனுமதிக் காதது ஜனநாயக விரோதம் எனக் குற்றம்சாட்டினர். கூட்டத்தில் 156 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவை திமுக கவுன்சி லர்கள் புறக்கணித்தது மற்றும் கவுன்சில் கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்காக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கவுன் சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அளவுக்கு சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி திமுக கவுன்சிலர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் ஆலோசனை நடத் தினார். அதில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெற கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பிரச்சினைகளை எழுப்பாததால் கூட்டம் அமைதியாக நடந்தது.

SCROLL FOR NEXT