தமிழகம்

ஆண்டவனிடம்தான் கேட்க வேண்டும்: ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இல.கணேசன் கருத்து

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி இனி ஆண்டவ னிடம்தான் கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பி னரும், மாநிலங்களவை உறுப்பி னருமான இல.கணேசன் தெரிவித் தார்.

தருமபுரியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் மத்திய நிதி அமைச் சர் ப.சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட நட வடிக்கை. இதை மத்திய அரசின் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று கூறுவதை ஏற்க முடியாது.

மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து செயல்படுவது பாராட்டுக்கு உரியது. இரு அரசு களும் இணைந்து செயல்படும் போதுதான் நாடு முன்னேறும். தமிழக அரசுக்கு மத்திய அரசு துணையாக இருந்ததால்தான் ஜல்லிக்கட்டு சாத்தியமானது.

நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார். எனவே, அதுபற்றி இனி ஆண்டவ னிடம்தான் கேட்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அடுத்தகட்ட தலை வர்கள் இல்லாததால் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும் தற்போது அதை அக்கட்சியினர் சரிசெய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT