அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம் 
தமிழகம்

வருமான வரித் துறை நோட்டீஸை எதிர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வருமான வரித் துறை வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, அமைச்சர் பொன்முடிக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன.

அதன் அடிப்படையில், அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் பொன்முடி பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை" என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, நோட்டீஸின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT