மதுரை: ராமநாதபுரம் அருகே ரயில் பாதை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.
இதனால் பிப்ரவரி 1 முதல் 28-ம் தேதி வரை வியாழக் கிழமைகள் தவிர, மற்ற நாட்களில் ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்குப் பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக பகல் 12 மணிக்குப் புறப்படும். பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்களை இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் ராமேசுவரம் - மதுரை ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
எனவே இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.