தமிழகம்

கலைமாமணி விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.காமராசன் மரணம்

செய்திப்பிரிவு

திரைப்படப் பாடலாசிரியரும் கலைமாமணி விருது பெற்ற வருமான கவிஞர் நா.காமராசன் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 76.

புதுக்கவிதை இயக்க முன் னோடி என அழைக்கப்பட்ட கவிஞர் நா.காமராசன், 600-க் கும் மேற்பட்ட திரைப்பட பாடல் களை எழுதியுள்ளார். எம்ஜிஆரால் திரைத்துறைக்கு வந்த நா.காம ராசன், அவருக்காக பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

நீதிக்கு தலைவணங்கு படத் தில் ‘கனவுகளே.. ஆயிரம் கனவு களே’, பல்லாண்டு வாழ்க படத் தில் ‘போய் வா நதி அலையே..’ ரஜினியின் நல்லவனுக்கு நல்ல வன் படத்தில் ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு சிறகு முளைத்தது’ போன்ற பாடல்கள் இவருக்கு பெயரை பெற்றுத் தந்தன.

கருப்பு மலர்கள், தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும் உள்ளிட்ட 38 கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இதில் கருப்பு மலர்கள் என்ற நூலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட் டுள்ளது.

தமிழக அரசின் ‘கலைமாமணி’ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். எம்ஜிஆர் அழைப் பின்பேரில் அதிமுகவில் இணைந்து பல பொறுப்புகளில் பணியாற்றினார்.

கடந்த சில மாதங்களாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நா.காமராசன், கோடம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.

கவிஞர் நா.காமராசன், தேனி மாவட்டம் போ.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு லோகமணி என்ற மனைவியும், தைப்பாவை என்ற மகளும், திலீபன் என்ற மகனும் உள்ளனர். நா.காமராசன் மறைவுக்கு திரையுலகத்தினரும், கவிஞர்களும் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

SCROLL FOR NEXT