தமிழகம்

ரூ.19 கோடி அந்நிய செலாவணி மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

போலி நிறுவனங்கள் தொடங்கி ரூ.19 கோடி அந்நிய செலாவணி மோசடி செய்த நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் எலெக்ட் ரானிக் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் நடத்துவதாக கூறி ஆயிரம்விளக்கு இந்தி யன் வங்கியில் கணக்கு தொடங்கி யுள்ளார். பின்னர், தனது பெயரில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்து வேறு சில வங்கிகளிலும் கணக்கு தொடங்கினார்.

பொருட்களை இறக்குமதி செய்ததாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்து இருக்கிறார். இதற்காக போலி பில்கள், ஆவணங்களையும் தயார் செய்து வங்கிகளில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசார ணையில், சுமார் ரூ.19 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் லியாகத் அலியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வங்கிக் கணக்கில் இருந்த ஒரு கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயையும் முடக்கி வைத்தனர்.

SCROLL FOR NEXT