சென்னையில் நடைபெறும் மருத்துவ பட்டமேற்படிப்பு கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக விழுப்புரத் தைச் சேர்ந்த மருத்துவர் பிரனிதா தாக்கல் செய்த மனுவில், ‘கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை யின்போது சலுகை மதிப்பெண் வழங்கப்படக் கூடாது என்றும், எளிதில் அணுகமுடியாத மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணி யாற்றும் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை வகுத்துள்ளது.
ஆனால், சென்னையில் தற்போது நடைபெறும் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் மருத்துவர்க ளுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது, இந்திய மருத்துவக் கவுன்சில் விதி முறைக்கு எதிரானது. எனவே, மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந் தாய்வுக்கு தடை விதிக்கவேண் டும்” என்று கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இவ் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, ‘‘இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை யின்படியே கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர் களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதுதொடர் பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கிராமப் பகுதிகளை வரை யறை செய்யும் உரிமை மாநில அரசுக்குத்தான் உள்ளது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதனடிப்படையிலேயே மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, மருத்துவ பட்டமேற்படிப்பு கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, கலந்தாய்வு முடிவு இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரர் மனுவுக்குப் பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இவ்வழக்கு விசார ணையை கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிபதி தள்ளிவைத்தார்.