பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமாரின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா மறைவு செய்தி கேட்டு துயரமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.
கன்னட சூப்பர் ஸ்டாரின் மனைவியும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான பர்வதம்மா ராஜ்குமார் இன்று (புதன்கிழமை) காலை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பர்வதம்மா மே 14 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவில் திடீரென அவரின் ரத்த அழுத்தம் குறைந்தது. அதைத் தொடர்ந்து இன்று காலை 4.40 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.