மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில் விருந்துக்கு முக்கிய இடம் உண்டு. விருந்தில் கட்டாயம் இடம் பெறுவது அப்பளம். பொறிக் காமலேயே நம்மை சாப்பிடத் தூண்டுவது அப்பளம். ஆனால், அந்த அப்பளத்தை தயாரிக்கும் தொழிலாளர்களின் நிலையோ பரிதாபத்துக்குறியதாக உள்ளது.
மாநில அளவில் 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள், அப்பளம் தயாரிக்கும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
அப்பளத் தயாரிப்பு நிறுவனங் கள் அப்பளம் தயாரிப்பவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக் காததால் அரசின் தொழிலாளர் நல திட்ட பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட அப்பளத் தொழிலாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
“நாங்கள் பல ஆண்டுகளாக அப்பளத் தயாரிப்பு தொழிலை செய்து வருகிறோம். பெரிய அப்பளத் தயாரிப்பு நிறுவனங்கள், இத்தொழிலை, தொழிலாளர் மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் வராமல் இருக்கும் வகை யில், அவுட்சோர்சிங் என்ற பெயரில், குடிசைத் தொழில் போன்று, அந்தந்த ஊர்களில், முகவர்களையும், கிளைகளையும் அமைத்து செய்து வருகின்றனர். முகவர்கள், வீடுகளை வாடகைக்கு எடுத்து, பெரிய நிறுவனங்களிடம் உளுந்து மாவைப் பெற்று, எங் களைப் பயன்படுத்தி அப்பளம் தயாரித்து, அந்நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், அரசு எங்களை தொழிலாளர்களாக ஏற்பதில்லை. அதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதில்லை. கம்பெனி சட்டத்தின் கீழ் நாங் கள் செய்துவரும் தொழில் வராததால், பணி செய்யும் இடத்தில் எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. நாங்கள் வேலை செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை. பல இடங்களில் கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை. இதனால் இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிக இன்னலுக்கு உள்ளாகிறார்கள். நாங்கள் வேலை செய்யும் இடங் களில் உளுந்து மாவு காற்றில் பறந்தபடி இருக்கும். இதனால், உடல் முழுவதும் மாவு படியும். ஆடைகள் அனைத்தும் வீணாகும். அக்காற்றை சுவாசிக்கும் பல தொழிலாளர்கள் ஆஸ்துமா, ஒவ்வாமை, சுவாசக் கோளாறு ஆகிய நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து பாதுகாக்கும் வகையில், எங் களுக்கு எந்தவித பாதுகாப்பு கவசங்களையும் முகவர்கள் வழங்குவதில்லை.
எங்களுக்கு வேலை செய்தால் மட்டுமே கூலி வழங்கப்படும். வேலைக்கு வராவிட்டால் கூலி இல்லை. அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை விடப்படும். அந்த நாள்களுக்கு கூலி வழங்கப் படமாட்டாது. 3 மாத மழை காலம் மற்றும் பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு 180 நாள்களுக்கு மட்டுமே எங்களுக்கு வேலை கிடைக்கும். இங்கு நேர நிர்வாகம் அறவே இல்லை. காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டியிருக்கும். எங்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து, எங்கள் தொழிலை கம்பெனி சட்டத்தின் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீடித் தொழிலாளர்கள், எங்களுக்கான கூலியை பல ஆண்டுகளாக உயர்த்தாமல், எங்களை கம்பெனி சட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக அங்கீ கரிக்காமல், எங்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை மறுத்து, அப்பளம் கம்பெனி உரிமையா ளர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட்டனர். இவர்கள் விளம் பரத்திற்கு செலவிடும் தொகை யைவிட, எங்களுக்கு வழங் கும் தொகை மிக மிகக் குறைவு. எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை” என்றார் அவர்.