தமிழகம்

சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு: சென்னை மாநகராட்சி

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நோட்டீஸ், ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தியுள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் இந்தாண்டு 1,500 கோடி ரூபாய் சொத்துவரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 1,213 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 287 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி நோட்டீஸ் வழங்குதல், கட்டிடம் சீல் வைத்தல், பொருட்கள் ஜப்தி, வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டுதல் மற்றும் அருகில் பேனர் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்." இவ்வாறு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT