விழுப்புரம்: தமிழகத்தில் 40,000 கி.மீ.ருக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
விழுப்புரம் அருகே காணை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழகத்தில் 148 சமத்துவ புரங்களும் புனரமைக்கபபட்டு வருகிறது. இந்தாண்டு 88 சமத்துவ புரங்கள் சீரமைப்புக்காக ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் வகையில் 40,000 கி.மீ சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடிக்கு மேல் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 390 கி.மீ கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.