தமிழகம்

‘வார்தா’ புயல் பாதிப்புக்கு பிறகு கிண்டி சிறுவர் பூங்கா இன்று திறப்பு

செய்திப்பிரிவு

“வார்தா” புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக் கப்பட்டதைத் தொடர்ந்து, கிண்டி சிறுவர் பூங்கா இன்று திறக்கப்படுகிறது.

“வார்தா” புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் வண் டலூர் உயிரியல் பூங்கா மற்று கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவற்றையும் விட்டுவைக்காமல் சின்னாபின்னமாக்கியது. இதனால் இந்த இரு பூங்காக்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த 18 நாட்களாக பார்வையாளர்கள் யாரும் அனு மதிக்கப்படவில்லை. இந்நிலையில் கிண்டி சிறுவர் பூங்கா இன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை தலைவர் கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் 12-ம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைத் தாக்கிய வார்தா புயலால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன அந்த பாதிப்புகளை சீரமைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, வெள்ளிக்கிழமை (டிச.30) முதல் கிண்டி சிறுவர் பூங்கா திறக்கப்பட உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு விரைவில் திறக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT