சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
‘வார்தா’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 057 மில்லியன் கன அடியாகும். நேற்றைய நிலவரப்படி இந்த ஏரிகளில் மொத்தம் ஆயிரத்து 666 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் 9 ஆயிரத்து 414 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.