புயலாக உருவெடுத்த 'வார்தா' வலுவிழக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அதன் தீவிரம் பலமடங்கு அதிகரித்து அதிதீவிர புயலாக உருவெடுத்தது.
* தீவிர புயலுக்கும் அதி தீவிர புயலுக்கும் இடையேயான வித்தியாசம் காற்றின் வேகத்தைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
* அதி தீவிரப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
* அதே நேரத்தில் தீவிரப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் மட்டுமே பலத்த காற்று வீசும்.
இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு இதுகுறித்துக் கூறும்போது, ''அதி தீவிரப் புயலான 'வார்தா', தீவிரப் புயலாக மட்டுமே வலுவிழக்கும்.
* 'வார்தா' அதே நேரத்தில் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 100- 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் 120 கி.மீ. வரையிலும் அதிகரிக்கக்கூடும்" என்று கூறியுள்ளது.