தமிழகம்

எழுத்துகளால் தமிழக அரசியல் சூழலை மாற்றியவர் சோ - தமிழிசை புகழஞ்சலி

செய்திப்பிரிவு

தன் எழுத்துகளால் தமிழக அரசியல் சூழலையே பல முறை மாற்றியவர் சோ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோவின் மறைவு குறித்து இன்று தமிழிசை வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''மரியாதைக்குரிய மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

அன்றன்றைய அரசியல்சூழலை எழுதுவது மட்டுமல்லாமல் தன் எழுத்துகளால் தமிழக அரசியல் சூழலையே பல முறை மாற்றியவர். தமிழக பாஜக வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT