தமிழகம்

6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

சிறுமியை பாலியல் கொடு மைக்கு ஆளாக்கிய ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக் கப்பட்டது.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 2014-ம் ஆண்டு தனது அண்ணனுடன் அங்குள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் வி.அரிஹரன் (25), அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சிறுமியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் அரிஹரனை சாஸ்திரி நகர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.கலைமதி, சிறுமியை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆட்டோ டிரைவர் அரிஹரனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT