கே.பாலகிருஷ்ணன் | கோப்புப் படம் 
தமிழகம்

தேசிய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஒரு முக்கியமான நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ஒற்றை மொழி ஆதிக்கத்தை முன்னெடுக்கும் சக்திகளுக்கு மத்தியில், தேசிய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை முக்கியமானது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்," உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் இன்று வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது. இதன் மூலம் சாதாரண மக்களும் தீர்ப்புகளை படிக்கவும், பொது விவாதத்தில் பங்கெடுக்கவும் இந்த முடிவு வழிவகுக்கும். வரலாற்று‌ சிறப்புமிக்க இந்த முடிவை சிபிஎம் வரவேற்கிறது.

இதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய மொழிகளில் நடப்பதை சாத்தியமாக்கிட நீதித்துறை முன்வர வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம்,‌ தாய்மொழியில் நிர்வாகம் என்பதை சி.பி.ஐ(எம்) நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இதுவே இந்திய மக்களின் உள விருப்பம்.

ஆனால் ஒற்றை மொழி ஆதிக்கத்தை முன்னெடுத்து, அரசமைப்பிற்கும்,‌ மக்களுக்கும் விரோதமாக பேசும் சக்திகள் அதிகாரத்தில் கொக்கரித்து வரும் சூழலில் - உச்ச நீதிமன்றம் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை முக்கியமானது." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT