தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம்: 813 ஆசிரியர்களுக்கு இன்று பாராட்டுச் சான்றிதழ்

செய்திப்பிரிவு

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறந்து விளங்கிய 813 ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று (ஜனவரி 26) நடைபெறும் குடியரசுதின விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதி செய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய 813 அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று (ஜனவரி 26) நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT