திண்டுக்கல்: திண்டுக்கல்லில் டீ கடையில் விற்பனையான வடைக்குள் ஈ இருந்ததால் புகாரின்பேரில் கடைக்காரருக்கு உணவு பாதுகாப்பு துறை யினர் ரூ.2000 அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் சார்- ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள டீ கடை ஒன்றில் ஒருவர் வடை வாங்கி சாப்பிடத் தொடங்கிய போது, வடையினுள் ஈ ஒன்று இருந்ததை கண்டார். இது குறித்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் கடையில் சோதனை நடத்தி சுகாதார மற்ற முறையில் வடை தயாரித்ததாக கடைக்காரருக்கு ரூ.2000 அபராதம் விதித்தார். ஹோட்டல் டீக்கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.