பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆர்.நடேசன், மாவட்ட துணைத் தலைவர் தஸ்லிம், நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.உதயசந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்காதர், மாவட்டச் செயலாளர் எம்.ஜி.ஜலாலுதீன், மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் வன்கொடுமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வேங்கை வயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT