தமிழகம்

பி.ஆர்.பி நிறுவனத்தின் ரூ.528 கோடி சொத்து முடக்கம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் மேலூரில் கிரானைட் குவாரி நடத்திவரும் பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலை யில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக பி.ஆர்.பி நிறுவனம் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

1,625 அசையா சொத்துக்களை பி.ஆர்.பி நிறுவனம் சட்ட விரோதமாக வாங்கியுள்ளது. மொத்தம் ரூ.103 கோடிக்கு இந்த சொத்து கள் வாங்கப்பட்டுள்ளன. இவற் றின் இன்றைய மதிப்பு ரூ.528 கோடி.

மேலும் வங்கிகளில் ரூ.32 லட்சத்து 57 ஆயிரத்து 275 இருப்புத் தொகை வைத்துள்ளனர். இவை அனைத்தும் பி.ஆர்.பி எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பி.ஆர்.பி கிரானைட்ஸ் பெயரில் உள்ளன. ஆனால் சொத்துக்கள் வாங்கப்பட்டதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. எனவே, சட்ட விரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ரூ.528 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி இருப்பு பணம் ஆகிய அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT