ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளான நேற்று பலர் மயக்கமடைந்தனர். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்கள். எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

பணிநிரந்தரம் செய்யக் கோரி சிறப்பு பயிற்றுநர்கள் தொடர் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்கள் சென்னை டிபிஐவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 2 லட்சம் மாற்றுத் திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க 3 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 23-ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2-வது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளாக பணி அனுபவம் கொண்டஎங்களை கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய தமிழகஅரசு முன்வர வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’என்றனர்.

SCROLL FOR NEXT