நாகப்பட்டினம்: பாஜகவை தோற்கடிக்க எதிரணியினர் ஒன்று சேர்ந்து மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் நாகூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசியல் சட்டத்தை அவமதித்து தமிழக ஆளுநர் செயல்படக் கூடாது. தமிழக ஆளுநர் மட்டுமில்லாமல், ஆர்எஸ்எஸ் நிர்வாகிபோல செயல்படும் அனைத்து ஆளுநர்கள் மீதும் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு போட்டியாக ஆளுநர்கள் தனி அரசாங்கத்தை நடத்த நினைத்து, மாநில அரசுகளோடு போட்டி போடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், அக்கட்சி முன்மொழிந்துள்ள திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தை எதிரணியினர் ஒன்று சேர்ந்து உருவாக்க வேண்டும்.
இல்லையென்றால் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.