கூடங்குளம் அணு உலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள கூத் தங்குழி கிராமத்தில், இரு தரப்பு மீனவர்கள் நாட்டு வெடிகுண்டு களை வீசி மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. இதில் இருவர் காய மடைந்தனர். போலீஸார் சோதனை நடத்தி 82 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர்.
கூத்தங்குழி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாகவே மீனவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை கையாள் வதும், மோதலுக்கு பயன்படுத்து வதும் தொடர்கிறது. சமீப கால மாக, சிலுவை கித்தேரியன் மற்றும் சுதாகர் தலைமையிலான இரு தரப்பினர் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அப்பகுதி யில் அமைதியின்மையை ஏற்படுத் தியுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை காலை 6 மணியளவில் இருதரப்பும் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக் கொண்டனர். இந்த மோதல் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த தாக போலீஸ் வட்டாரங்கள் தெரி வித்தன. இதில் சுதாகர் ஆதரவாளர் மதன் (23), சிலுவை கித்தேரியன் ஆதரவாளர் ரீகன் (25) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அங் குள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். மோதல் காரணமாக கூத்தங்குழி மக்கள் அச்சத்தால் வீடுகளில் கதவுகளை அடைத்து முடங்கியிருந்தனர்.
தகவலறிந்த மாவட்ட எஸ்பி நரேந்திரன்நாயர் தலைமையிலான போலீஸார் காலை 10.30 மணிக்கு கிராமத்துக்குள் குவிக்கப் பட்டனர். தகவலின்பேரில் பாத்திமா நகர் தோட்டங்களில் பனை ஓலை களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 பிளாஸ்டிக் வாளிகளில் தலா 9 நாட்டு வெடி குண்டுகள் இருந்தன. இதன்படி மொத்தம் 82 குண்டுகள் சிக்கின.
மோதல் தொடர்பாக கூத்தங் குழியை சேர்ந்த இருதயம், பிரான் சிஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். நாட்டு வெடிகுண்டுகள் எங்கெல் லாம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு தொழிற்சாலை!
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய கூடங்குளம் அணு உலை அருகே சில கி.மீ. தூரத்துக்குள், நாட்டு வெடிகுண்டுகள் கையாளப்படும் அபாயம் குறித்து, `தி இந்து’ நாளிதழ் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூத்தங்குழியில் கொத்து கொத்தாக நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அபாயத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. கடற்கரை கிராமங்கள் நாட்டு வெடிகுண்டு தொழிற்சாலையாக மாறி இருப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.