‘வார்தா’ புயல் சேதங்களை பார்வை யிட வரும் மத்திய குழுவினர் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்க வேண் டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வார்தா’ புயல் சேதங்களை மத்திய குழு பார்வையிட வருவதன் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், மத்திய குழுவினர் ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்திப் பதுடன் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளையும், கோரிக்கை களையும் கேட்க வேண்டும்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு வந்த மத்திய குழுவினர் விவசாயிகளையோ, மக்கள் பிரதிநிதிகளையோ முழுமையாக சந்திக்காமல் ஆளுந்தரப்புடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றனர். அதனால் விவசாயிகளின் பட்டினிச்சாவு, தற்கொலை, அதிர்ச்சி மரணங்கள் உள்ளிட்ட பல செய்திகள் அவர்களின் கவனத்துக்குச் செல்லவில்லை.
தமிழகத்தின் வாழ்வதாரப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தாத நிலை ஏற்பட்டு உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் நியமிக்கப்படாமல் போய் விட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக அனுப்பப்பட்ட மத்திய குழுவை அதிமுக அரசு பயன்படுத்தாமல் கோட்டை விட்டது.
அப்படிப்பட்ட நிலைமை இம் முறை ஏற்பட்டு விடாமல் தவிர்க் கும் வகையில், மத்திய குழு வினர் தமிழகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை கட்சி சார் பின்றி சந்தித்து கலந்தாலோசிக்க வேண்டும். திமுகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங் களவை உறுப்பினர்கள் ஆகியோ ருக்கு இந்த ஆலோசனையில் உரிய வகையில் இடமளித்து மக்களின் பிரச்சினைகள், பாதிப்பு கள் போன்றவை குறித்து முழு தகவல்களை திரட்டி, வார்தா புய லால் ஏற்பட்ட முழு சேதத்தையும் சீரமைக்கும் வகையில் தமிழகத் துக்கு தேவையான நிவாரண நிதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.